திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுடன் புத்தக பிரசாதம் வழங்க முடிவு

சுவாமியின் மகிமை புரியும் வகையில் சிறிய அளவிலான புத்தகம் அச்சிட்டு வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வர வைபவம், விஷ்ணு சஹஸ்ரநாமம், வெங்கடேஸ்வர சுப்ரபாதம், பஜகோவிந்தம், லலிதா சஹஸ்ரநாமம், சிவ ஸ்தோத்திரம், பகவத் கீதை மற்றும் பிற இந்து கடவுள்கள் மற்றும் இதிகாசங்கள் தொடர்பான மத புத்தகங்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

இதற்காக பல நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *