பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசின் நலதிட்டப் பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.அதில்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை கீழப்பாவூர் செல்லும் விலக்கு பகுதி மற்றும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி சந்தையில் இருந்து ஆவுடையனூர் செல்லும் சாலை பகுதி என இரண்டு இடங்களில் மனமகிழ் மன்றம் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனமகிழ்மன்றங்கள் திறக்க இருக்கும் பகுதிகளை சுற்றி தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்கள். மார்க்கெட் என பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளாக இருப்பதால் மனமகிழ் மன்றங்களை திறக்க கூடாது என பல்வேறு சமூக ஆர்வலர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் மனமகிழ் மன்றத்தை திறப்பதற்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தகவல் வருகிறது. மேலும் கைக்குழந்தையுடன் பெண்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் சில நாட்களுக்கு முன்பு திரண்டு பாவூர்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர் வருங்கால இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை தனியார் மதுபான கடை திறப்பதன் மூலம் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தவறான வழியில் செல்வதற்கு வழி வகுத்து விடக்கூடாது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக பாவூர்சத்திரத்தில் அமையவிருக்கும் தனியார் மனமகிழ் மன்றங்களை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்
