சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவானதொடர்ந்து வார்த்தைகளை பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சென்னை மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

 

ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொதுஇடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

 

கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த புதிய தலைமுறை பெண் செய்தியாளரிடம், முகம்சுளிக்கும் பதிலளித்திருக்கிறார். வகையில் சீமான் செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) . சீமான் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *