பள்ளி மாணவி மாயம்பெற்றோர் சாலை மறியல்

செங்கல்பட்டு:

கடப்பாக்கம் அருகே கடலில் மாயமான பள்ளி மாணவியை மீட்கக்கோரி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ள இடைக்கழி நாடு பேரூராட்சிக்குட்பட்ட சேமிலிபுரம் கிராமத்தைச் சேர்ந்வர் பாபு.

மூன்று நாட்களுக்கு முன் பாபு தனது இரண்டு மகள்கள், மனைவி உட்பட குடும்பத்துடன் கடப்பாக்கம் பீச் பகுதியில் குளிக்கச் சென்றனர்.

அப்பொழுது கடல் அலையில் சிக்கி கீர்த்திகா, ஹாசினி அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு இருந்தவர் கீர்த்திகாவை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் ஹாசினி ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக மாயமான எட்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஹாசினி உடலை தேட காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் விரைந்து மீட்கப்படும் என தெரிவித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *