புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக நூறாவது நாள் காசநோய் விழிப்புணர்வு முகாம் வில்லியனூர் ரமேஷ் திரையரங்கு வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார மைய மருத்துவ அதிகாரிகள் டாக்டர் ரொடரிக்கோ ஆப்ரின், டாக்டர் ரஞ்சனி ராமச்சந்திரன், டாக்டர் மினிதா, டாக்டர் சாஹிரா பானூ, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் கவிதா, வாசுதேவன், டாக்டர் சந்திரசேகர், வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் பாமகள் கவிதை மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொமுச தலைவர் அங்காளன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஏழுமலை, மிலிட்டரி முருகன், சேகர், கலைமணி, முருகையன், பாலு, தயாளன், ரகு, அபிமன்னன், வீரமுத்து, மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.