ராணிப்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே திருமால்பூர் கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி பொங்கல் திருநாளன்று முன்விராத காரணமாக ஏற்பட்ட தகராறில் இருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக சூர்யா என்கின்ற தமிழரசன் மற்றும் விஜயகணபதி ஆகிய இருவர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சூரிய என்கின்ற தமிழரசன் நேற்று மாலை 3 மணி அளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் உயிரிழந்த தமிழரசனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தற்போது திருமால்பூர் பகுதியில் பனப்பாக்கம், பள்ளூர் சாலை மறியலில் ஈடுபடும் முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து இறந்தவரின் உடலை அவருடைய சொந்த ஊருக்கு இன்று மாலை எடுத்து வர உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதி முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.