தென்காசி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம் மற்றும்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது.
தென்காசி அருகே உள்ள இலத்தூர், ஆய்க்குடி , சாம்பவர் வடகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் பறவைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுப் பணியில் குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 80 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.செம்மிசை, ஆலா, நாமக் கோழி. மஞ்சள் மூக்க நாரை சீல்கை சிறவி , நீர் காகம் குப்பிடங்கள் நீர் காகம் ஆகிய உள்நாட்டு வகை பறவை இனங்களும் ரஷ்யா, ஐரோப்பா நாடுகளிலிருந்து வந்துள்ள கார்கினி, நீலவால் பஞ்சுருட்டான் ஆகிய ரக பறவைகளும் இந்த கணக்கெடுக்கிப்பின் போது கண்டறியப்பட்டது….