காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் தென்காசி மாவட்ட போலீசார் அதிரடி
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட நபர் தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக குற்றவாளியை விரைந்து கைது செய்ய தே காசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பதுங்கி இருந்த திருச்சி மாவட்டம் வடக்கு காட்டூர் அப்துல் குத்தூஸ் என்பவரின் மகன் செய்யது அமீர் (27) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தவுள்ளனர்.