தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவன் அருண் சந்தோஷ்க்கு பாரத் வித்யா மந்திர் பள்ளியில் பாராட்டு
தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற பாரத் வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 கல்வி பயிலும் மாணவன் அருண் சந்தோஷ்க்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மனோகர் என்பவரது மகன் அருண் சந்தோஷ் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவருகிறார்.
இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடை பெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று தென்காசி மாவட்டத்திற்கும், தான் கல்வி பயிலும் பாரத் வித்யா மந்திர் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவரை பாராட்டும் விதமாக இன்று பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின நிகழ்ச்சியில் பள்ளியின் செயலர் காந்திமதி மோகன கிருஷ்ணன் மாணவன் அருண் சந்தோஷ்க்கு பொன்னாடை போர்த்தி, கிரீடம் வைத்து ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் அமன் ராஜ், பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன், மாணவனின் பெற்றோர் விக்னேஸ்வரி, சாந்தப்பன், உடற்பயிற்சி ஆசிரியர் ராஜசேகர், டேக்வாண்டோ மாஸ்டர் நாராயண சர்மா, பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பரிசு பெற்ற பள்ளி மாணவன் அருண் சந்தோஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.