தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவன் அருண் சந்தோஷ்க்கு குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்
தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற பாரத் வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 கல்வி பயிலும் மாணவன் அருண் சந்தோஷ்க்கு இன்று நடைபெற்ற 76வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மனோகர் என்பவரது புதல்வன் அருண் சந்தோஷ் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடை பெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்று தென்காசி மாவட்டத்திற்கும், தான் கல்வி பயிலும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவரை பாராட்டும் விதமாக இன்று தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற 76 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் மாணவரை வெகுவாக பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலையில்சான்றிதழ் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்
தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.