மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை நேற்று வெளியிடப்பட்டது
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதும் மேலும் தினமலர்’ நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின், புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது