குடியரசு தின விழாவில் மாநில அளவிலான சிறந்த மருத்துவர் விருது மரு.ராஜேஷ் கண்ணன் பெற்றார்
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை மருத்துவரான ராஜேஷ் கண்ணனுக்கு மாநில அளவில் சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற மருத்துவர் மருத்துவர் ராஜேஷ் கண்ணன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வழக்கமான அரசு மருத்துவமனைக்கு உரித்தான இலக்கணங்கள் எதுவும் இன்றி தனியார் மருத்துவமனை போல வளாகம் முழுவதும் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் நூலகம் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, காத்திருக்கும் நோயாளிகளுக்கு இதமளிக்கும் இனிய இசை என்றெல்லாம் இருப்பது மற்ற அரசு மருத்துவமனைகளில் இல்லாத அதிசயமாகும்.
உள் நோயாளிகளுக்கு பற்பசை சோப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய மஞ்சள் பை இலவசமாக வழங்கப்படுகிறது.
வியாழக்கிழமை தோறும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது
தாலுகா அளவில் மருத்துவமனை என்ற போதிலும் பிரசவ அறுவை சிகிச்சைகள், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகள், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சைகள் இங்கு சிறந்த முறையில் நடந்து வருகிறது
சிறந்த மருத்துவமனைக்கான மத்திய அரசின் விருதான காயகல்ப விருது முதல் மற்றும் இரண்டாம் இடம் என இரு முறை இம் மருத்துவமனை வென்றுள்ளது.

இது போன்ற சாதனைகளை நிகழ்த்தியமைக்காக மருத்துவர் ராஜேஷ் கண்ணாவிற்கு மாநில அளவில் சிறந்த மருத்துவருக்கான விருது சென்னையில் மருத்துவ பணிகள் இயக்குனர் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.