மண்ணின் மைந்தர்களை போற்றுவோம்

  • 76வது குடியரசு தின விழாமண்ணின் மைந்தர்களை போற்றுவோம்!

சுதந்திர போராட்ட வீரர்களான பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம், பாரதியார், வாஞ்சிநாதன் ஆகியோர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள்.

தற்போதைய தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் பூலித்தேவன், ஒண்டிவீரன், செங்கோட்டையில் வாஞ்சிநாதன் பிறந்தனர். தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஒட்டப்பிடாரத்தில் வ.உ. சிதம்பரம், எட்டயபுரத்தில் பாரதியார், கோவில்பட்டி தாலுகா கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன், ஒட்டப்பிடாரம் தாலுகா கவர்ணகிரியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தனர். சுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த அனைத்து ஊர்களும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தன.

சுதந்திர போராட்ட வீரர்களான ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் உள்ளிட்டவர்கள் பிறந்த மாவட்டங்கள் வெவ்வேறாக இருந்தபோதிலும், 10க்கும் மேற்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வீரம் விளைந்த மண்ணாக கருதப்படும் திருநெல்வேலிக்கு வாழ்நாள் முழுதும் பெருமைதான்!

நடராஜன்✍️

↳ Share

One thought on “மண்ணின் மைந்தர்களை போற்றுவோம்

  1. மண்ணின் மைந்தர்களைப் போற்றுவோம் என்கிற கட்டுறை திரு நடராஜன் அவர்கள் சுருக்கமான தெளிவாக விளக்கி உள்ளார்கள். உண்மையில் 10க்கும் அதிஹமான வீரர்களைப் பெற்றெடுத்த மண் திருநெல்வேலி மாவட்டத்திற்கே பெருமை.
    Mannin mainthargalai potruvom enkira katturai Thiru Natarajan avargal surukamana thelivaha vilakki ullar. Unmaiyil 10 kum athihamana veerargalai petredutha mann thirunelveli mavattathirke perumai.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *