குடியரசு தின விழா காவலரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர்

76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்….

நாட்டின் 76 -வது குடியரசு தின விழாவானது இன்று நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் அமைந்துள்ள ஈ.சி இ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தேசியக்கொடியை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய நிலையில் அவருடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உடன் இருந்தார். தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். அதனனதொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

தொடர்ந்து, காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 29 துறைகளில் சிறந்த பணியாற்றிய 318 அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மாற்று திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் .உழவர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் மூலம் 11 பயனாளிகளுக்கு, ரூ.5,19,510 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்வில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை உயர் அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்….

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *