குற்றாலத்தில் நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் உள்ள தெஷண மாற நாடார் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜான் டேவிட் பொருளாளர் சுப்ரமணியன் கல்வி குழு தலைவர் கிருபாகரன் தென் மண்டல தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், அரசு தேர்வுகளுக்கு பயின்று வரும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் பயிற்சி வகுப்பு அளிப்பது தொடர்பாகவும், தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு அனுபவமிக்க பேராசிரியர்களை கொண்டு இணையதள வழியில் பயிற்சி வகுப்பு நடத்துவற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில்,
தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசன கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்,
குற்றாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் முழு திருவுருவச் சிலை நிறுவ வேண்டும், தென் தமிழகத்தில் பீடி தொழில் மூலம் மக்களின் வறுமையை போக்கியவரும், சினிமா துறையில் நலிந்த கலைஞர்களை ஊக்குவித்தவரும், தமிழகத்தின் திரைப்படம் மற்றும் நாடக கலைஞர்களை அதிக அளவில் ஊக்குவித்தவருமான அரிராம் சேட் பெயரை முக்கூடல் பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டும்,
தனித்தமிழ்நாடு பெற்றுத்தந்த தமிழகத்தின் தந்தை மபொசி -க்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும், தென்காசியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக புறவழிச் சாலை திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அந்தத் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தென்காசி புறவழிச் சாலை திட்ட பணிகளை அரசு விரைவில் தொடங்க வேண்டும்
, தென் தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆங்காங்கே குற்றாலத்தில் உள்ள அனைத்து அவர்களுக்கும் செல்லும் வழிகாட்டி பதாகைகளை அனைத்து மொழிகளிலும் வைக்க வேண்டும்
உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கல்வி குழு நிர்வாகிகள் அம்மையப்பன், செந்தில்குமார், சக்திவேல், ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.