தென்காசி மாணவிக்கு ஆளுநர் கையால் விருது.

தென்காசி துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஹெபினா என்ற மாணவி இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்காக நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் கையால் விருது கொடுக்கப்பட்டது. இம் மாணவி தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கோட்டைசாமி- ராமலட்சுமி தம்பதிகள் ஆவர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *