பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநரின் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியானது.
கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிப்பு.