தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் தென்காசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் தென்காசி கோட்டம், திருமலை குமாரசாமி, மற்றும் ஏனைய அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்
நிகழ்ச்சியில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
மேற்பார்வை மின் பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பேசுகையில் விவசாய மின் இணைப்புகளை தொடர் ஆய்வு மேற்கொண்டு மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மின் துண்டிப்பு செய்து காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்கவும், அனைத்து மின் இணைப்புகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வாரிய விதி முறைகளுக்கு முரணாக இருந்தால் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வருவாய் இழப்பீட்டை தடுப்பதற்கும், குற்றாலத்தில் வனவிலங்குகளால் மின் கட்டமைப்புகளுக்கு, சேதம் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்து சீரான விநியோகம் வழங்கவும், தென்காசி கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்கவும், வருங்கால மின் நுகர்வை கருத்தில் கொண்டு புதிய மின் மாற்றிகள் அமைப்பதற்கும் உத்தரவிட்டார்.
மேலும் 76 வது குடியரசு தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரிடம் பணி பாராட்டு சான்று மற்றும் கேடயம் பெற்ற உதவி செயற் பொறியாளர் கலா,கம்பியாளர் மரியதாஸ், ஆகியார்களை திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி அவர்கள் பாராட்டு தெரிவித்து வருங்காலங்களில் சிறப்பாக பணியாற்றி மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்தினார் உடன், தென்காசி கோட்ட செயற்பொறியாளர் திருமலை குமாரசாமி, பொறியாளர்கள், அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், ( TNPDCL OFFICIAL APP ) திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034, மற்றும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்கிற தகவல் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது
Post Views: 319