பெண்களுக்கு புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தீர்கள், அதனால் என்ன பயன் ? வீரலட்சுமி
தமிழர் முன்னேற்ற படை .நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட்டு அறிக்கையில்
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் ஐயா அவர்களே !
பெண்களுக்கு புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தீர்கள், அதனால் என்ன பயன் ?
நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் போல் செயல்படுவதில்லை.
அவர்களின் செயல் விளக்க வேண்டும் என்றால் கேவலமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது.
பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் பொருளாதாரத்தை ஏமாற்றப்பட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு கொடுத்து ஒரு வருடம் ஆகிறது.
மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து ஒரு வருடம் ஆகிறது இன்று வரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணம் கிடைக்கவில்லை மாறாக விசாரணை என்ற போர்வையில்பலமுறை வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் அலகழிக்கக்கப்பட்டுள்ளார் .பாதிப்பை ஏற்படுத்திய குற்றவாளிகள் கூட விசாரணை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கொண்டு லஞ்ச பணம் பெற்றுக் கொண்டு மாமன் மச்சான் போல் செயல்படுவது கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்ட பெண்ணை அலகழிப்பது அவமானப்படுத்துவது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் தேடி குற்றவாளி கூட கூட்டு சேர்ந்து கல்லா கட்டும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ( 29:01:2025)மதியம் 12 மணிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வாயிலில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நீதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் .என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்