விசாரணை அமைப்புகளே ஜனநாயகத்தின் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடலாமா ?
சென்னை உயர்நீதி மன்றமே பத்திரிகையாளர்களாளால் தான் இந்த விவகாரமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் ஊடகங்கள் தங்கள் கடமையை செய்து உள்ளனர் என தெரிவித்துள்ள நிலையில் விசாரணை என்ற பெயரில் செல்போன்களை பறிமுதல் செய்து பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் சிறப்பு விசாரணை குழுவுக்கு தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் தனது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டுவிட்டு, மனிதாபிமானத்தோடும், ஒரு பெண் தொடர்பான செய்தி என்ற பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் மீதான அடைக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிறப்பு விசாரணை குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை என்ற பெயரில் அவர்களின் சொத்து விவரங்களையும், தனிப்பட்ட குடும்ப விவரங்களை கேட்பதோடு, குற்றவாளிக்கு உடந்தையாக இருந்தது போலவும், குற்றவாளி போலவும் செய்தியாளர்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளும் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் நடந்துகொள்வது அதிர்ச்சி அளிக்கிறது. வாட்சப்பில் அனுப்பப்படும் அழைப்பானையை ஏற்று, சட்டத்திற்கு மதிப்பு கொடுத்து நடந்த விவரங்களை கூறுவதற்காக செல்லும் செய்தியாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதோடு, அவர்களை செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்துகிறோம் என்ற பெயரில் தடய அறிவியல் துறைக்கு அனுப்புவது ஏற்புடையது அல்ல. எனவே இத்தகைய போக்கை கைவிட்டு பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் ஜனநாயகத்திற்கு இடையூராக விசாரணை அமைப்புகளே இருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என்பதையும் தெரிவித்து தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சிறப்பு விசாரணை குழுவுக்கு தனது கண்டனத்தை பதிவுசெய்கிறது…
எப்பொழுதும் எந்த நேரத்திலும். பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறையில்.
R. சந்திரிகா,
மாநிலத் தலைவர்.
பெ.வஜ்ஜிரவேல்,
மாநில செயல் தலைவர்.
R. கதிரவன்
மாநில பொதுச் செயலாளர்.