அரிட்டாப்பட்டி விவசாயிகள்பிரேமலதா விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவிப்பு
தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் அரிட்டாப்பட்டி விவசாயிகள் சந்திப்பு;
டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்தாகி போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் சென்னை கேப்டன் ஆலயத்தில் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முன்னர் அரிட்டாப்பட்டி போராட்டத்திற்கு நேரடியாக சென்று களத்தில் விவசாயிகளோடு நின்று போராட்டத்தில் கலந்துகொண்டு குரல் கொடுத்த முதல் தலைவர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.