விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டில் நான்கு பேர் கொண்ட கும்பல் கையில் பையை வைத்துக்கொண்டு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கையில் இருந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது. அதன் மதிப்பு 1 கோடியே 60 லட்சம் ஆகும். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனே அவர்களை விசாரித்து பார்த்ததில் அவர்கள் திருச்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் கட்டு கட்டாக பணம்.
