தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டி அறிக்கை.

 

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக 19.08.2024 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும் எனவும், கேங்மேன் தொழிலாளர்கள் அவரவர்கள் ஊர்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும், ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அப்போதைய தலைமை பொறியாளர் ராஜேஷ் லக்கானி பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அடுத்த பேச்சு வார்த்தையின் போது தங்களையும் அழைக்கிறோம். அதில் உங்கள் குறைகளை சொல்லுங்கள் நிவர்த்தி செய்கிறோம் என வாய்மொழி உத்தரவு கொடுத்தார்கள். ஆனால் தற்போது 01.02.2025 ஆம் தேதி தொழிற்சங்கத்திற்கும், மின்வாரியத்திற்கும் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைக்கு, கேங்மேன் தொழிலாளர் சங்கத்தை அழைக்காதது ஏன்?. மின்வாரியத்தில் 35 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தபோது, புதிய மின் பாதை அமைப்பதற்கும், போல் நடுவதற்கும் 9,613 கேங்மேன் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அவர்களைக் கொண்டு மின்வாரியத்தில் உள்ள அனைத்து பணிகளையும் செய்யும்படி AE மற்றும் JE, போர் மேன், அதிகாரிகள் அனைத்து பணிகளுக்கும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நாங்கள் (AE மற்றும் JE, போர் மேன்) சொல்லும் அனைத்து வேலைகளையும் நீங்கள் (கேங்மேன் தொழிலாளர்கள்) செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியதன் காரணமாக, 75 கேங்மேன் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம், ஆனால் பொதுமக்களுக்கு மின் சேவை செய்து இறந்த தொழிலாளிக்கு எந்த பலனும் கிடையாது. அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் அவர்களிடம் அந்த வேலையை சொல்லவே இல்லை, அவராகவே அந்த வேலையை எடுத்து செய்ததன் விளைவு, அவர் உயிர் இழந்துள்ளார் என்று கூறுகிறார்கள். அதனால் இழப்பீடு தர முடியாது என அலட்சியப் படுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?. அரசு மின்துறையில் ஒரு முறை தளர்வு என்ற அடிப்படையில் BP NO: 41,42,43,44,45 என்ற அடிப்படையில் மஸ்தூர் பணியாளர்களை கம்பியாளராக (Wireman) அறிவித்தது போல், கேங்மேன் தொழிலாளர்களை உதவியாளராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை விட்டுள்ளார்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *