இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.என தாமக தலைவர் ஜி.கே.வாசன் எம். பி., கோரிக்கை விடுத்துள்ளார் அதில்
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதி மீனவர்கள் 10 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது படகுகளை பறிமுதல் செய்திருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், இவர்களது படகுகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்வதும், தொடர்கதையாக இருக்கிறது, இது மீனவர்களை மிகுந்த அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்துகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 32 நாட்களில் 7 முறைதான் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று இருக்கின்றார்கள் ஆனால் அதற்குள் 52 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படு இருக்கிறார்கள். இச்செயல் மிகுந்த வருத்ததிற்குரியது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு, எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.
இனிமேலும் தாமதம் செய்யாமல் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி ஒரு சுமூக தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதோடு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.