பேரறிஞர் அண்ணா நினைவு நாள் தென்காசி மாவட்ட திமுக சார்பில் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது….
பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம் கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் கபியூர் ரஹ்மான் ,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் JK ரமேஷ் மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் முத்து சுப்பிரமணியன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் .தொடர்ந்து தென்காசி கிழக்கு ஒன்றியம் குற்றாலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம்உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்