துப்பாக்கியால் சுட்டு 13மீனவர்கள் கைது – இலங்கை அரசை கண்டித்து தேமுதிக  அறிக்கை

துப்பாக்கியால் சுட்டு 13மீனவர்கள் கைது – இலங்கை அரசை கண்டித்து தேமுதிக  அறிக்கை

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடித் தான் மீன் பிடிப்பதற்கு வருகின்றனர். அவர்களை அத்துமீறி கைது செய்து அவர்களின் உடைமைக்கும், உயிருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலே தொடர்ந்து இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்திற்கு உரிய விஷயம். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அவர்களை படகுகளுடன் சிறைப்பிடிப்பதும், மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. பலமுறை இந்தியா அரசு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் கைது நடவடிக்கையிலிருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லை. இது தமிழக மீனவர்களிடையே மிகப் பெரிய ஒரு கொந்தளிப்பையும், மன வேதனையும் உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு இலங்கை சுதந்திரம் பெற்ற நாள்’ இந்த நாளில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சுதந்திரத்தை வழங்கி மனித நேயத்தோடு நீதியும், நேர்மையும் நிலைநாட்ட வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *