பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள சிப்காட்டில் டாடா நிறுவனம் தொடங்கியுள்ள சோலார் மின் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
ரூ 4,400 கோடியில் அமைந்துள்ள இந்த சோலார் மின்கலன் ஆலையால் சுமார் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் முதலமைச்சர் விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். சிப்காட்டில் அமைக்கப்பட்ட மகா உணவு பூங்காவையும் திறந்து வைத்தார்