சிறுவன் கன்னத்தில்  Fevi kwik பயன்படுத்திய செவிலியர்.

கர்நாடகாவில் கன்னத்தில் அடிபட்டு ஏழு வயது சிறுவன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான் அந்த ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றிய செவிலியர் ஜோதி அவனுக்கு தையல் போடாமல்   Fevi kwik தடவி உள்ளார்.

அச்சிறுவனது பெற்றோர் சுகாதார பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்திருந்த நிலையில் அவர்கள் அவரை பணி மாற்றம் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஆதார வீடியோ ஒன்றையும் கொடுத்துள்ளனர். அதில் செவிலியர் ஜோதி தையல் போட்டால் தழும்பு ஏற்படும் அதனால்  Fevi kwik பயன்படுத்தினேன் நான் பல ஆண்டுகளாக இப்படித்தான் செய்து வருகிறேன் எனவும் பேசியுள்ளார்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *