இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி க்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் , தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்! என முழக்கமிட்டு மத்திய அரசை கண்டித்து எம்.பி க்கள் போராட்டம் நடத்தினர்.