டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது-இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்-திருமாவளவன் பேட்டி
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தமிழ்நாட்டு காவல்துறையில் இருக்கின்றே தனி உளவு பிரிவை உருவாக்க வேண்டும்
திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்தவர் கூறுகையில்:
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் ஆனால் அது தேசத்திற்கான பின்னடைவு என கருத வேண்டி இருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் நியாயமாக முறையில் நடைபெற்றதா என்ற ஐய்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை காங்கிரஸ் ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளி விட்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. டெல்லி தேர்தல் அடிப்படையாகக் கொண்டு கூட்டணியில் உள்ள கட்சிகள் சந்திக்க வேண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது ஈரோடு எதிர்பார்த்த வெற்றியை திமுக பெரும் என்று நம்புகிறேன்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான கேள்விக்கு:
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர் வாழ விரும்புகின்றனர் பாரதிய ஜனதா போன்ற சன்பரிவாத கும்பல்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மதப் பதட்டங்களை உண்டு பண்ணா முயற்சிக்கிறார்கள் இப்படித்தான் வட மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களை நிறுத்தி இரு சமூகத்திலும் பலியை கொடுத்து மதப் பிரச்சனையை ஏற்படுத்தினார்கள் இந்துச் சகோதரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அடிப்படை பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத பாஜக கோவில்,மசூதி போன்ற பிரச்சனைகளை தூண்டி மதப் பிரச்சினைகளை கிளப்பி அரசியல் ஆதாயம் தேடுவது வழிமுறைகளை தான் கையாண்டு வருகிறார்கள்.
இந்து சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பாஜகவிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பரங்குன்றம் தற்போது அமைதியாக உள்ளது மதவெறியர்களை அனுமதிக்க கூடாது. என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுகிறேன்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு:
பாலியல் குற்றத்தை அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது புள்ளி விவரங்களில் தெரிகிறது.
எப்படி தலித்துகளுக்கு சிறுபான்மையினருக்கு எதிராக குற்றங்கள் பெருகி வருகிறதோ அப்படித்தான் பாலியல் குற்றங்களும் பெருகி வருகிறது பாலியல் குற்றங்களை பெருகுவதை காவல்துறை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது கர்ப்பிணி பெண்ணுக்கு எதிராக செய்த குற்றவாளியை மானவிக்கு எதிராக குற்றங்களை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு காவல்துறையில் இதுக்கென்று தனி உளவு பிரிவை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன்.
புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு:
ஏற்கனவே இந்த பிரச்சனை குறித்து ஒன்றிய அரசிடம் நமது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரிய அதிகாரிகளோடு சந்தித்து நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அந்த அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம் அவர் தனது நிலைப்பாட்டில் அப்போது உறுதியாக இருந்தார் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு இசைவு தந்தால் மட்டும் தான் இதை ஒதுக்கீடு செய்வோம் என்று உடும்பு பிடியாக பேசினார் இது வன்மையான கண்டடத்துக்குரியது.
இந்தியா முழுவதும் அவர்கள் விரும்புகிற ஒரே கல்வி முறையை கொண்டு வருவதற்கு இந்த தேசிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது கல்விக் கொள்கை தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுக்கான அதிகார பட்டியலில் இடம் பெற வேண்டும் ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு இந்திய அரசு அதனை முழுமையாக தன்வசம் படுத்திக் கொண்டு விருப்பம் போல் செயல்பட்டு வருகிறது எனவே தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற இந்த நிலைப்பாடு சரியானது இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறோம் இதில் உறுதியாக இருக்க வேண்டும் இந்த நிதியை பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் நீதிமன்றத்தை அணுகி நிதியை பெறுகிற நீதியை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு:
பல சந்தர்ப்பங்களின் அதிகாரிகள் எடுக்கிற சட்ட ஒழுங்கு சார்ந்த நிலைப்பாடுகள் தான் சமூக பதட்டங்களுக்கு வலியுறுத்தினன எல்லா பிரச்சனைகளையும் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அணுகுகிறார்.
பாதிக்கப்பட்ட ஒரு பக்கம் நின்று அவர்களுக்கான நீதி சிறுபான்மையினர் பக்கம் நின்று அவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையிலான அணுகுமுறை என்கிற ஒரு நிலைப்பாடு அதிகாரி இடத்திலே இருப்பதில்லை..
அவர்களாக கற்பனை செய்து கொள்வது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடும் ஆதனால் நாங்கள் தடை உத்தரவு போடுகிறோம் என்று மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த முடிவு இந்த நிலைக்கு காரணமாக அமைந்தது அதற்கு முன்னதாக வழக்கமாக சிறுபான்மையினர் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து அவர்களை அங்கே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது இதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது ஆட்சி நிர்வாகத்திற்கு அல்லது ஆளுங்கட்சிக்கு இது போன்ற நெருக்கடிகளை அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்களின் அணுகுமுறையால் வருகிறார்கள் திருப்பரங்குன்றத்திலே மாவட்ட ஆட்சி நிர்வாகம் எடுத்த நிலைப்பாடு இந்த பதற்றத்திற்கு காரணம் என்பதை மாற்று கருத்து இல்லை நாங்களும் அந்த விமர்சனத்தை முன்வைக்கிறோம்.
பாராளுமன்றத்தில் 40 எம்பிகள் குரல் கொடுக்காததால் தமிழகத்திற்கு எந்த திட்டம் வரவில்லை என்று எதிர் கட்சிகள் கூறியது குறித்த கேள்விக்கு:
எதிர்க்கட்சிகள் யாரு அவங்க என்ன பேசினாங்க என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்? பாரதிய ஜனதா ஆளாத பிற கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் மிகப்பெரிய ஊறவச்சனை செய்கிற ஒரு அரசாக பாஜக அரசு உள்ளது சந்திரபாபு நாயுடும் நிதீஷ் குமார் திருப்தி படுத்துவதற்காகவே அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே குறியாக இருக்கிறது பாஜக அரசு இந்த முறை பீகாருக்கும் ஆந்திராவிக்கும் தான் அதிகமான நிதியை ஒதுக்கி உள்ளார்கள். பாஜக அல்லாத மாநிலங்களையும் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். பாஜக அல்லாத பிற மாநிலங்கள் என்று வரிசைப்படுத்தும் போது தமிழ்நாடு அவர்களுக்கு மிக முக்கியமான பகை நாடாக உள்ளது காரணம் அவர்கள் முன்வைக்கக்கூடிய அனைத்தும் சனாதன கொள்கைகளும் எதிர்க்கிற ஒரு அரசாக திமுக அரசு உள்ளது மிக கடுமையாக எதிர்க்கிறார் ஒரு நிலைப்பாட்டை திமுக அரசு கையாண்டு வருகிறது அதில் ஒன்று நீட் எதிர்ப்பு தேசிய கல்விக் கொள்கை ஏற்கமாட்டோம் என்று புறக்கணிப்பது அதேபோல அவர்களின் சமஸ்கிருதம் மயமாக கடுமையாக எதிர்ப்ப நிலைப்பாடு என்று இப்படி வரிசை படுத்தே போகலாம் பாரதிய ஜனதா இந்த ஆட்சி நிர்வாகம் திராவிட கருத்துகளுக்கு எதிராக இருக்கிறது எனவே திமுக அரசு தேசிய கல்விக் கொள்கை எதிர்க்கிற இதை கருத்தில் கொண்டு பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
கோவை அருகே பேரூர் சத்தீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு தமிழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள் நீதிமன்றம் முதலில் அந்த அனுமதியை வழங்கியது மேல்முறையீட்டு வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்வதற்கும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும் இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது நீதிமன்றமும் அதற்கு துணையாக இருப்பது கவலை அளிக்கிறது என்றார்.