இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் காலை 5 மணி முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது பக்தர்கள் வரிசை ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீண்டு இருந்தது.
கோவிலின் மேற்கு வாசல் எப்போதும் திறந்து இருப்பதால் வரிசையில் நிற்காமல் பல பக்தர்கள் அந்த வழியாக உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் ஆங்காங்கே சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. பின்பு கோவில் நிர்வாகித்தனர் ஊழியர்கள் வந்து கூட்டத்தை சரி செய்தனர்.
பின்பு காவல்துறையினர் உதவியோடு கூட்டம் சரி செய்யப்பட்டது .