தென்காசியில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கட்டிடம் – மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தென்காசி நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட எல் ஆர் எஸ். பாளையம் தெருவில் 972 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த நியாய விலைக் கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டசட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டது.
இந்த நியாய விலைக் கடை கட்டிடத் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் ரிப்பன் வெட்டி நியாய விலைக் கடையை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்ததுடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கும் பணியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற துணை தலைவர் KNLS சுப்பையா, காங்கிரஸ் மகளிரணி அமைப்பாளர் பூமாதேவி தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன் கவுன்சிலர் சுப்பிரமணியன் ,மாவட்ட பிரதிநிதி முருகன்
மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்