தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசியை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் தங்கம் வென்று அசத்தல் – ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது மும்பையில் கடந்த 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து 80 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்திலிருந்து 24 மாணவ, மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், வயது வாரியாக நடைபெற்ற இந்த ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசியை சேர்ந்த 14 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, அதிலும் 8 பேர் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கம் வென்றுள்ள நிலையில், தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியை முடித்துக் கொண்டு இன்று தென்காசி திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு தென்காசி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், போலீசார் ஒன்றிணைந்து மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பளித்த நிலையில், தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.
தொடர்ந்து, இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்ததாக உலக அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ஸ்கேட்டிங் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது….