சென்னை,நங்கநல்லூர் சேர்ந்த குழந்தை ஐஸ்வர்யா ஆவார். இவருக்கு வயது 7. இவர் பள்ளி முடிந்து தன் தந்தையுடன் வீட்டிற்கு சென்றபோது வீட்டில் உள்ள இரும்பு கேட் மேலே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.
காயம் அடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு உடனே அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வழியிலேயே குழந்தை மரணம் அடைந்து விட்டது. இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பழவந்தாங்கல் போலீசார் இந்த வழக்கினை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.