தைப்பூசம்- அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அன்னதானமம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா:

தமிழ்நாட்டில் தைப்பூச திருவிழாவானது பழனிக்கு அடுத்து கரூர் மாவட்டம் குளித்தலையில் வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும்.அதேபோல் இந்த வருடமும் திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த எட்டு ஊர் கோயில்களின் சாமிகள் மிக அருமையாக அலங்காரத்தோடு வாகனங்களில் காவிரி நதிக்கரையில் அருகே ஒன்று கூடி விக்கிரகங்கள் காவிரி நதியில் புனித நீராடி தீர்த்தவாரி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தைப்பூச திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக வருடந்தோறும் போல இந்த ஆண்டும் இரண்டு நாட்கள் மாபெரும் அன்னதானம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து அன்னம் பெற்றுச் சென்றனர்.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி திருஈங்கோய்மலை ஶ்ரீ லலிதா மகிளா சமாஜத்தின் சிவபிரியாம்பா மாதா ஜி , ஜெயாம்பா மாதா ஜி , கீதாம்ருதாம்பா மாதா ஜி,குளித்தலை சாந்தி வனம் ஆசிரமம் தலைவர் டாட்ரீக் சுவாமி ஜி மற்றும் கிராமியம்.நாராயணன் , வாழைக்காய் வியாபாரி சேட் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.
சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனை படி இந்த மாபெம் அன்னதான விழா ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், கருணாநீதி, சுந்தரேசன்,ஆனந்த்,வெங்கடேஷ்,தியானேஷ்வரன்,அர்ச்சகர் கல்யாண வெங்கட்ராமன்,அர்ச்சகர் மஹா விஷ்ணு ,தினார்த், சந்தோஷ்,கோபி, சங்கரன்,சரவணன்,திருமுருகன், முத்து,சரவணன் ஜி,வீரப்பன், மணி,தினேஷ்,முகிலன்,கருப்பத்தூர் முரளி செந்தில், தமிழ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *