விஜய் நடிகராக தனது பயணத்தை தொடர்ந்தவர். தனது தந்தையின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தவர்.ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை கேட்டாலும் பின்பு தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.
இப்பொழுது தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யமே வைத்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி இருக்கும் நிலையில் அவர் தன்னுடைய நடிப்பை முழுவதுமாக விட்டு விட்டு முழு நேர அரசியல்வாதியாக தனது பயணத்தை தொடர போவதாக தெரிவித்துள்ளார்.மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை ஆரம்பித்து அதன் மூலம் பல சேவைகளையும் செய்து வருகிறார்.
இவ்வாறு இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு Y -பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது
Y-பிரிவு பாதுகாப்பு என்பது மொத்தம் 11 பேர் கொண்ட குழுவாகும். இதில் ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருப்பார். மேலும் 9mm பிஸ்டலுடன் ஒருவரும், டென் கன் டன் ஒருவரும் என இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் இடம் பெறுவர். மேலும் இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்படும்.