தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்
தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மக்களை பற்றி சிந்திக்க கூடிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும், மக்கள் எளிதில் சென்று வரக்கூடிய இடத்தில் மருத்துவ கல்லூரி அமையும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்
தென்காசி மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளுக்கு ரூபாய் 19 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் சார்பில் தென்காசி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் வட்டார பொது சுகாதார அளவு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற ஏழு புதிய கட்டிடங்களுக்கு ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் ஆன பணிகளையும் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மகளிர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலன் வேளாண்மை பொறியியல் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு ஆகிய துறைகளின் சார்பில் ரூ.40 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது :
நேற்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள், தேவையான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் முதல்வர் ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தர இருப்பதால் நடை பெற்று கொண்டிருக்க கூடிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி இருப்பதாக கூறினார். மேலும் தென்காசி மாவட்ட மக்களின் அத்தியாவசிய தேவையான மருத்துவ கல்லூரி வேண்டும் என்கிற மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகளும்,, மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்டத்திற்கென சிப்காட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த கோரிக்கைகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். மக்கள் எளிதில் சென்று வரக்கூடிய அளவிற்கு மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பதால், மாவட்ட ஆட்சியர் கூறிய 2 , 3 இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். முதல்வர் வரும் தேதி முடிவாகவில்லை. முதல்வர் வருவதற்கு முன்பாகவே அனைத்து வளர்ச்சி பணிகளையும் முடிப்பதற்கு பணிகளை முடிக்கி விட்டுள்ளதாக கூறினார்.இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, பழனி நாடார் , சதன் திருமலை குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்,
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன்,தென்காசி நகர் மன்ற தலைவர் சாதீர், தென்காசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன்,உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ..