பென்னாகரம் அருகே உள்ள பொத்தனூர் என்ற ஊரில் 100 நாள் வேலைக்கு ராதா, லட்சுமி என்ற இரு பெண்கள் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது மிக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் அவர்கள் மீது மோதியது.
மோதிய வேகத்தில் ராதா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லட்சுமி என்ற பெண் படுகாயம் விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.