தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு – தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம்.
தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கலந்தாலோசனைக் கூட்டம் தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க கட்டடத்தில் வைத்து தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் தலைவர் மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு துணைச் சேர்மனுமான மாடக்கண் தலைமையிலும் செயலாளரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைச் செயலாளருமான கார்த்திக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளின் பேரில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பானது (Federation) 16.02.2025 ம் தேதியில் நடத்திய காணொளி செயற்குழு கூட்டத்தில் (Zoom Meeting) நமது மற்றும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு கொண்டு வர இருக்கும் வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவானது வழக்கறிஞர் நலனுக்கு எதிராகவும், வழக்கறிஞர்களின் குரல் வளையை நசுக்குகின்ற முறையிலும், வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், வழக்கறிஞர்களின் உரிமையை பாதிக்கின்ற வகையிலும் இருக்கின்ற சட்டத்திருத்த மசோதாவினை எந்தகால கட்டத்திலும் அமுல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை ஏற்று 21.02.2025 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ளும் படிக்கும், வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருக்கும் படிக்கும் மேலும் Video conference மூலமாகவும் ஆஜராவதிலிருந்தும் விலகியிருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.