ஜம்முவில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் – இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து நேற்று நடத்திய தேசிய புத்தொழில் விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீரில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது, புதுமை, தொழில்முனைவோர் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்த இரண்டு நாள் திருவிழாவை பிப்ரவரி 22, சனிக்கிழமை அன்று மத்திய அறிவியல்,தொழில்நுட்பம்,புவி அறிவியலுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தொடங்கி வைத்தார்.
காந்தி நகரில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இரண்டு நாள் விழாவில், ஜம்மு பிராந்தியத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், இந்த விழாவில், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், உயிரி காப்பகங்கள், உற்பத்தியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பார்வையிடுவதற்கான தளத்தை வழங்கினர்.
இதில் 800-க்கும் மேற்பட்டோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர். புத்தொழில் நிறுவனங்களின் புதுமையான யோசனைகள், அவர்களில் சிலர் உருவாக்கிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களின் செயல்விளக்கத்தைக் கேட்டறிந்தனர்.