மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், பிரகிருதி 2025-ஐ தொடங்கி வைத்தார்.

கார்பன் சந்தைகள் குறித்த சர்வதேச மாநாடான பிரகிருதி 2025 (உருமாறும் முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நெகிழ்வு, விழிப்புணர்வு, அறிவு மற்றும் வளங்களை ஊக்குவித்தல்), புதுதில்லியில் இன்று நடைபெற்றது. உருமாறும் காலநிலை முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நெகிழ்வு, விழிப்புணர்வு, அறிவு மற்றும் வளங்களை ஊக்குவிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்  மனோகர் லால், இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்து, காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் கார்பன் சந்தைகளின் முக்கிய பங்கு குறித்த இந்திய அரசின் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உமிழ்வு இலக்குகளை அடையவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கங்கை தீப பூஜை மற்றும் கோவர்தன் பூஜை போன்ற பாரம்பரிய நடைமுறைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். அவை நாட்டின் ஆழமான வேரூன்றிய சுற்றுச்சூழல் உணர்வை பிரதிபலிக்கின்றன மற்றும் நவீன நிலைத்தன்மை முயற்சிகளுக்கு துணைபுரியும், என்றார் அவர்.

விழாவில் பேசிய மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்  ஆகாஷ் திரிபாதி, கார்பன் சந்தையில் வாங்குபவர் மற்றும் விற்பவரின் தேவைகளுக்கு ஏற்ப இலக்கு அறிவிப்பு இருப்பதை இந்திய கார்பன் சந்தை உறுதி செய்கிறது, என்று கூறினார். செலவு குறைந்த நடவடிக்கைகள் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான ஒரு உத்தியை செயல்படுத்துவதில்  கவனம்  செலுத்தப்படுகிறது, என்றார். “இணக்க பொறிமுறையின் ஒரு பகுதியாக, கார்பன் குறைப்பு இலக்குகள் படிப்படியாக செயல்படுத்தப்படும், 2027 க்குள் 40% குறைப்பும், மீதமுள்ளவை 2030 க்குள்ளும் எட்டப்படும்”, என்று அவர் தெரிவித்தார்.

உலகளாவிய கார்பன் சந்தையின் தற்போதைய போக்குகள், சவால்கள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்த விவாதங்களில் ஈடுபடுவதற்கும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிரகிருதி 2025 ஒரு உயர்மட்ட தளத்தை வழங்கியது. உலகளாவிய தலைவர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைப்பதன் மூலம், இந்த நிகழ்வு நிலையான, குறைந்த கார்பன் எதிர்காலத்திற்கான புதுமையான தீர்வுகள் குறித்த விவாதங்களை மேம்படுத்தியது.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *