மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் மாநாட்டை புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக, தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு 2025-ம் ஆண்டு மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். முதன்முறையாக, இம்மாநாட்டில் பங்கேற்க மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பதிவு அதிகாரி, ஆகியோரை நியமிக்க தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டரீதியிலான அதிகார அமைப்புகளாக, தலைமைத் செயல் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சட்டமன்றப் பேரவை தொகுதி அளவில் முக்கியப் பணியாளர்களாக உள்ளனர்.

இந்த இரண்டு நாள் மாநாடு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள், தங்களது அனுபவங்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கும், விவாதிப்பதற்கும் நல்ல தளமாக அமையும். மாநாட்டின் முதல் நாளில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயனுள்ள தகவல் தொடர்பு, சமூக ஊடக செயல்பாடுகளை மேம்படுத்துதல், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு அமைப்புகளின் சட்டரீதியான பங்களிப்பு உள்ளிட்ட நவீன தேர்தல் நிர்வாகத்தின் முக்கிய பகுதிகள் குறித்து விவாதங்கள் நடைபெறும். இரண்டாவது நாளில், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் முந்தைய நாளில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்த தங்களது செயல் திட்டத்தை எடுத்துரைக்கவுள்ளனர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *