தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப் போர் ஏற்படுத்த முயலும் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான ரயில் நிலையங்களில் இந்தியில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகளை கறுப்பு மை கொண்டு அழித்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தி.மு.க மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தென்காசியில் ரயில் நிலையம் அருகே மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜே.கே.ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது தென்காசி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலை கதிரவன், மாநில சுற்றுசூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, தெற்கு மாவட்ட பொருளாளர் செரீப், மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்