முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கீழப்பாவூரில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் கீழப்பாவூர் அதிமுக அலுவலகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் ,
பின்னர் கீழப்பாவூர் மெயின் பஜார் , பஸ் ஸ்டாண்டு , சென்ட்ரல் பேங்க் சந்திப்பு மற்றும் கழுநீர்குளம் காளத்தி மடம் ஆகிய பகுதிகளில் கழக கொடியேற்றி ,இனிப்பு வழங்கினார்
தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பேரூர் கழகச் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.