தமிழ்நாடு செஃபி பேராயத்தின் தலைவரும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராயர் டாக்டர். க. மேஷாக் ராஜா தலைமையில் பேராயர்கள் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தை தலைமைக் கழகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
சந்திப்பின் போது கழகத் துணைச் செயலாளர்கள் எல்.கே. சுதீஷ் , முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி , தேமுதிக சமூக வலைதள அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்