புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 10ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்றும் சனிக்கிழமை வேலை நாளாக உள்ள நிறுவனங்களுக்கு மார்ச் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.