தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய்த்துறையில் பணிபுரியும் தனித்துணை ஆசிரியர் மற்றும் வட்டாட்சியரின் பயன்பாட்டிற்காக 51 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருது நக்கீரன் இரா. கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜிக்கு வழங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் 6 கலைஞர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டிற்கான கலைச்செம்மல் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படுகட்டப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு
நன்றி தெரிவித்துக் கொண்டனர்.