மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், முடிவுகள் குறித்தும் கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது தொடர்பாக வரும் 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் பங்களிப்பதற்காக 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கான முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும், இந்த 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.