ரயில்வே பணிக்கான தேர்வு மையம் வெளிமாநிலங்களில் அமைத்ததற்கு கண்டனம்.

தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வு எழுதத் தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையம் அமைத்ததற்குக் கண்டனம்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும்அறிக்கை.

தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத் தேர்வு மார்ச் 19ல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்வு  அருகிலுள்ள மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்குத்தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தேர்வு எழுதுபவர்களைஅதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

சுமார் 6000 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் அதிகமான நபர்களுக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பது கடும்கண்டனத்திற்குரியது. இது நியாயமற்ற முறையில் தமிழக தேர்வர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி பணியில் சேர விடாமல் தடுக்கும் உத்தி என்றே கருத வேண்டிஇருக்கிறது. எனவே தாமதம் இன்றி தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்க உரியநடவடிக்கையை தென்னக ரயில்வே துறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

எம். எச். ஜவாஹிருல்லா

தலைவர்

மனிதநேய மக்கள் கட்சி.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *