திருவண்ணாமலை மாவட்டம்
பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில்
செங்கம் அடுத்த
பக்கிரி பாளையம் பகுதியில் செங்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது.
விழுப்புரம் சென்ற காரை மடக்கி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுமார் 1 இலட்சம் மதிப்பிலான 12 மூட்டைகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கார் டிக்கியில் வைத்து கடத்தியது தெரிய வந்தது.
போதை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு இரண்டு பேரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் *விழுப்புரம் பகுதி சேர்ந்த அய்யனார் (வ-43) மற்றும் சக்திவேல் (வ-39) என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.